சியான் 60 படத்தில் இணைந்த பிரபல நடிகர். சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்கும் கார்த்திக் சுப்ராஜ்!

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். பீட்சா, ஜிகர்தண்டா , பேட்ட , ஜகமே தந்திரம் இதை தொடர்ந்து தற்போது அவர், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து சியான் 60 திரைப்படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து செவன் ஸ்கிரீன் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்  அந்நியன் பட நாயகி சதா 40வயதிலும் 20 வயது போல இளமையில் கலக்கும் புகைப்படங்கள்

சியான் 60 படத்தில் இணைந்த பிரபல நடிகர். சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்கும் கார்த்திக் சுப்ராஜ்! 1

விளம்பரம்

இதை தொடர்ந்து இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்கின்றனர். விக்ரமுடன் சிம்ரன் கதாநாயகியாக ஜோடி சேருவது இதுவே முதல் முறை. இந்நிலையில் இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க போவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அனிருதிற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக தகவல் வெளியானது. அனிருத் ஏன் இந்த படத்தை விட்டு நீக்கப்பட்டார் என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியிடப்பட வில்லை.

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

சியான் 60 படத்தில் இணைந்த பிரபல நடிகர். சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்கும் கார்த்திக் சுப்ராஜ்! 2

விளம்பரம்

இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த படத்தில் பாபி சிம்ஹா இணையவுள்ளார் என்ற அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்ராஜ். கார்த்திக் சுப்ராஜ் படம் என்றாலே பாபி சிம்ஹா நிச்சயம் இருப்பர் என்று அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் கார்த்திக் சுப்ராஜின் முதல் படமான பீட்சா வில் தொடங்கி , ஜிகர்தண்டா , பேட்ட என அவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நடித்துள்ளார் பாபி சிம்ஹா. ஜகமே தந்திரம் படத்தை தவிர மற்ற எல்லா படங்களிலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சுஜா வருணே

சியான் 60 படத்தில் இணைந்த பிரபல நடிகர். சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்கும் கார்த்திக் சுப்ராஜ்! 3

விளம்பரம்

அதிலும் ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பிறகு பல படங்களில் பாபி சிம்ஹா நடித்திருந்தாலும் , சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காததால் எந்த படமும் பெரியளவில் வெற்றி பெற வில்லை. நீண்ட நாள் வெற்றி படத்திற்காக ஏங்கி கொண்டிருக்கும் பாபி சிம்ஹாவிற்கு இந்த படம் வெற்றியை தேடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment