Categories: Hot News

அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்! காதலுக்கு மரியாதை செய்து ஊரடங்கில் அவசரமாக திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை..!

மார்ச் மாதம் 16 ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டது. மேலும் எந்தவித சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமா துறை முடங்கியது.
இதன் காரணமாக சிறு பணியாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாத துவக்கத்தில் இருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சமீபத்தில் சினிமா துறைக்கு அளிக்கப்பட்ட தளர்வில் 25 பணியாளர்கள் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கும் பிரபலங்கள் சமூக விலகலை கட்டாயமாக கடைபிடித்து திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இதையடுத்து, மலையாள சின்னத்திரையில் “செம்பட்டு”என்ற தொடர் மூலம் அறிமுகமாகிவர் சுவாதி நித்யானந்த். இவர் “பாராமணம்” எ‌ன்ற பெய‌ரி‌ல் மேலும் ஒரு சின்னத்திரை தொடரில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் “பாராமணம்” எ‌ன்ற தொடரின் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் பிரதீஷ் என்பவரை கடந்த மே மாதம் 30-ஆம் தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து, சமூக விலகலோடு கேரளாவில் இருவீட்டார் பெரியோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் குறித்த புகைப்படங்களா சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.