Categories: National

ஆசிரியர் என்றும் பாராமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல்!! ஆன்லைனில் வகுப்பில் டீச்சருக்கு நேர்ந்த கொடுமை !!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கிய உடனே பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். ஆனால், தற்போது வரை நாடு முழுவதிலும் தொடங்கப்படவில்லை.

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றனர்.

இதையடுத்து, கேரளாவில் 1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இவர் பெயர் சாய் ஸ்வேதா. தன்னுடைய கணவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வரும் சூழ்நிலையில் இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தன்னுடைய ஆன்லைன் வகுப்பில், “டோரா புஜ்ஜி போனது; தங்கப்பூனை வந்தது” என்ற குழந்தைகள் விரும்பி பார்க்கும் காட்சிகள் மூலமாக குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் முகபாவனைகளை மாற்றி பாடம் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இருந்த போதிலும் சிலர் என்னை ஆசிரியை என்றும் பார்க்காமல் கூட மிகவும் இழிவுப்படுத்தி இருக்கின்றனர். எவ்வாறாயினும் அவற்றை கண்டு நான் பின்வாங்க கூடாது என்று என்னுடைய கணவர் எனக்கு கூறிய தைரியம் வார்த்தைகள் ” என்னை இன்னும் வலிமை படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா செவிக்கு விழுகையில், அவர் “கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை பேணி பாதுகாப்பதில் அதிக அளவில் அக்கறை காட்டும் ஆசிரியர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றார்கள்.

அவ்வாறு இருக்கையில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள ஆசிரியை சாய் ஸ்வேதா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.