Categories: BollyViral

இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனை தத்தெடுத்த ஷாருக் கான்

பீகாரின் முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு குழந்தை தனது தாய் இறந்ததுபோனது கூட தெரியாமல் அவரை எழுப்ப முயற்சித்து அழுகிற காணொளி சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலாக பரவி அனைவரை கண்கலங்க வைத்த நிலையில் நடிகர் ஷாருக் கானின் மீர் பவுண்டேசன் இந்த குழந்தையை தத்தெடுத்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஷாருக் கான்.

அதில் அவர் இந்த குழந்தை தன் பெற்றோரை இழந்த வழியை தங்கும் சக்தியை பெற அனைவரும் பிரார்த்திப்போம் என கூறி அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஷாருக் கான் மற்றும் மீர் பவுண்டேசனின் இந்த செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.