Latest News Updates by The Indian Times

Hot News

ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவராவது இனி பகல் கனவே! – கி.வீரமணி

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாததால் பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவால் பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் வெறும் 87 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. மருத்துவராகும் கனவு பலிக்கவில்லையே என்ற அதிர்ச்சியால் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டு செஞ்சியையடுத்த குக்கிராமமான பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா, நீட் தேர்வின் முடிவால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவராவது இனி பகல் கனவே! - கி.வீரமணி

பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களையும், பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண்களையும் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லும் குக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணான ஒரு கூலித் தொழிலாளியின் மகள் பெற்றுள்ளார் என்பது ஓர் இமாலய சாதனை. பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபாவால் நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது என்றால், இதற்குக் காரணம் பிரதீபாவா? ஒடுக்கப்பட்ட மக்களைக் குறி வைத்துக் கழுத்தறுக்கும் நீட் தேர்வா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.ஒரே மாதிரியான கல்வி திட்டமும், சம தரத்தில் கல்வி கற்பிக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாத ஒரு துணைக் கண்டத்தில், அனைவரையும் சம தளத்தில் நிறுத்தி நீட் என்ற பெயராலே தகுதி திறமையைச் சோதிப்பது கடைந்தெடுத்த அநீதி மற்றும் மோசடி, மேல்தட்டு சிபிஎஸ்இ-க்காக அந்த சிபிஎஸ்இ என்ற அமைப்பே தேர்வு நடத்துவது என்பது எந்த வகையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது? என  தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையிலும், அதன் நிலை என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top