Latest News Updates by The Indian Times

Entertainment

காலா வேண்டாம்.. ஜூராசிக் வேர்ல்டு போட்டுக்கிறோம்.. சென்னை தியேட்டர்கள் அதிரடி..!

சென்னை: சென்னை கமலா மற்றும் உதயம் தியேட்டர்களில் காலா திரைப்படத்திற்குப் பதில், நாளை ஜூராசிக் வேர்ல்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரஜினியின் காலா திரைப்படம் நாளை உகம் முழுவதும் ரிலீசாகிறது. கடும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இப்படம் கர்நாடகாவில் ரிலீசாக இருக்கிறது. தமிழகத்திலும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நாளை காலா படத்திற்குப் பதில் ஜூராசிக் வேல்டு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்தியேட்டரின் மேலாளர் கோபி அளித்துள்ள விளக்கத்தில், “காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம். இதனால் காலா திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதற்குப் பதிலாக ஜுராசிக் வேர்ல்டு படம் நாளை கமலா தியேட்டில் ரிலீசாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சென்னை உதயம் தியேட்டரிலும் காலா படத்திற்குப் பதிலாக ஜூராசிக் வேர்ல்டு படம் தான் ரிலீசாகிறது. மத்திய சென்னைப் பகுதியில் கமலா தியேட்டரும், உதயம் தியேட்டரும் மிக முக்கியமானவை. இந்த தியேட்டர்களில் காலா படம் ரிலீசாகததால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top