Categories: Hot News

சச்சின் மகள் ரசிகர்கள் புகைப்படம்! பதிவு செய்த 24 மணி நேரத்தில் பிச்சிட்டு போன லைக்கும் ஷேரும்!!

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள், ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்தவர் அவரது மகள் சாரா. இரண்டாவது அர்ஜூன். இவர் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார்.

மூத்த மகள் சாரா பற்றி சமீபத்தில் செய்திகள் பரவியுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சாரா அவர்கள் மீது பாலிவுட் இயக்குனர்களின் ஒரு கண் வைத்தபடி உள்ளன. அழகாக இருக்கும் போது , அறிவு குறைவாக இருக்கும் என்ற வாக்கியத்தை உடைத்து எறிந்தவர் சாரா என்று புகழ் வட்டத்தில் இருந்து வந்தார்.

ஆனால் தற்போது, சாராவை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிகள் பல நடந்த வண்ணம் உள்ளதாம். இந்த நிலையில், சாரா கடந்த சில நாட்களாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்ட படி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார். மேலும் இவரது ஃபாலோவர் லிஸ்ட் கடந்த 24 மணி நேரத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. விளையாட்டு உலகிலிருந்து திரையுலகில் வாரிசுகள் கால் பதிப்பது ஒன்றும் புதிதல்ல.

இது போலவே பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகில் உச்சத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.