Categories: Hot News

நடிகை சுகன்யாவின் மகளா இவங்கதானா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெளியான மகளின் ஃபோட்டோ!!

1990களில் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பின் வாயிலாக முன்னேற்றம் அடைந்தவர் நடிகை சுகன்யா. இவர் ‘புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, இளவரன், இந்தியன் போன்ற 50திற்கும் மேலாக வெற்றிப்படங்களை நடித்து கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர் மற்றும் கதாநாயகனோடு நடித்துள்ளார். அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கமல், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், என பல நட்சத்திரங்களோடு தன்னை ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் நாங்க ரொம்ப பிஸி என்று சொல்லி கொண்டு நடித்த இவர் நடுவில் காணாமல் போய்விட்டார்.

இவர் 2002 ஆம் ஆண்டு, ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ஒரே வருடதில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

விவாகரத்து பெற்ற கையோடு சில படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சில சீரியல்களிலும் குணசித்திர வேடத்தில் நடித்து வந்தார். மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவரை சுற்றி சர்ச்சைகள் பல சமுக வலைதளங்களில் பரவிய வண்ணம் இருந்தன.

சுகன்யாவிற்கு ஒரு மகள் இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை சுகன்யா தன்னுடைய மகளை அதிகம் மீடியா முன்னிலையில் காட்டியதே இல்லை. தற்போது இவருடைய மகளின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது