Categories: Entertainment

நடிகை பிந்து மாதவிக்கு கொரோனாவா? 14 நாட்கள் தனிமையில்! சோகத்தில் வெளியிட்ட வீடியோ!!

தமிழ் திரையுலகில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்துமாதவி பிக்பாஸிலும் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் நடித்து கழுகு 2 படம் வெளியாகியது. இதை தொடர்ந்து மாயன், யாருக்கும் அஞ்சேல் முதலிய படங்களில் நடித்த்திருந்த பிந்துமாதவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் அடைபட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின. அதனால் அவர் தனிமை படுத்தி கொண்டிருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்பில் உள்ள கேட்டை இழுத்து மூடும் காட்சி, போஸ்டர் ஒட்டும் காட்சி என இடம்பெற்றிருக்கிறது.

இதை அடுத்து குடியிருப்பில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வது அவசியம் என்பதை நடிகை பிந்து மாதவி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.