Categories: Hot News

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து: பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் நடக்கவிருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்துச் செய்யபட்டுவிட்டதாகவும் அனைத்து 10ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் இருவரை சுமார் 3500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 120க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையிலேயே அம்மாநில முதலமைச்சர் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.