Categories: Entertainment

பாவாடை, தாவணியில் கட்டி கொண்டு ரசிகர்களை ஈர்த்த பிக் பாஸ் நாயகி டிரெண்ட் ஆனா லொஸ்லியா!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் மூன்றில் பங்கேற்று உலகெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதுமாக பேசப்பட்டவர் லாஸ்லியா. இவர் வெகுளி குணம் தொடக்கத்தில் இருந்து நன்றாக பேசப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் காதல் விவகாரத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டு தன் பெயரை கொண்டார் லாஸ்லியா.

இருந்தபோதிலும் லாஸ்லியா தனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். லாஸ்லியா பெயரில் ஆர்மியும் அமைத்து அவரை போற்றினர். லாஸ்லியா சமீபத்தில் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தார். அதில் குறிப்பிடும் போது அவர் நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை தொடங்க உள்ளது எனவும் அவர் கூறினார். இதைப் பார்த்து ரசிகர்கள் பதிவின் கீழ் இதைய குறியை பறக்க விட்டனர்.

இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்க உள்ளார். இதனால் லாஸ்லியா விரைவிலேயே வெள்ளித்திரையிலும் தனது முத்திரையைப் பதிப்பார் என்று தெரிகிறது.

ஊரடங்கு காலத்தை பொழுது போக்குடன் கழிக்க இப்போது கடந்த 2016ல் பாவாடை தாவணியில் எடுத்த ஃபோட்டவை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் இதயங்களை கொடுத்து லாஸ்லியா வை இதய மழையில் நனைத்துவருகின்றனர்.