Categories: Entertainment

போக்கிரி குண்டு பையனா இவன் ? என்ன இப்படி மாறிட்டான்!!

தமிழ் சினிமாவில் பல குழந்தைகள் அறிமுகம் ஆகி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து பின் பெரிய அளவில் பிரபலமாக மாறுகின்றனர். அந்த வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் கமல் நடித்து வெளியான பஞ்சதந்திரம் என்ற காமெடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சிறுவன் பெயர் தான் பரத்.

தமிழகத்தை சேர்ந்த இந்தச் சிறுவன் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு காமெடி நடிகராக நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள வேளாங்கண்ணி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போதே பல கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்வாராம்.

இதைப் பார்த்த ஏவிஎம் குரூப் தமிழ் திரையுலகில் நைனா என்ற படம் இவரை அறிமுகப்படுத்தி வைத்தனர். இதை தொடர்ந்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர் மற்றும் உத்தம புத்திரன் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தற்போது பெரியவனாக வளர்ந்தது மட்டுமன்றி ஃபிட் ஆக மாறி விட்டாராம். இவர் கடைசியாக நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இந்த படத்தில் அனுஷ்காவிற்கு தம்பியாக நடித்தார்.

இந்நிலையில் இவர் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கூடிய விரைவில் மீண்டும் சினிமா உலகிற்கு வருவேன் என்று கூறி விட்டு தனது படிப்பை தொடர்கிறார்.