Categories: NationalSports

போட்டியின் நடுவில் குழந்தை பாசம் தவறாமல் பாலூட்டிய வீராங்கனை! வைரல் புகைப்படம் இதோ !!

கைப்பந்து போட்டி நடக்கும் போதே வீராங்கனை ஒருவர் போட்டியின் இடையே வெளி வந்து கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.மிசோரம் என்னும் மாநிலம் துய்கும் மாவட்டத்தைச் சார்ந்த கைப்பந்து வீராங்கனை லால்வென்ட் லுவாங்கி தான் அவர்.

அந்த மாநிலத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் அவரின் ஏழு மாதக் குழந்தையை கொண்டு சென்றுள்ளார். போட்டி இடைவேளைக்கு சென்று லுவாங்கி அவரது குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

இதை அருகில் உள்ள ஒரு நபர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருவதை தொடர்ந்து மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ரோய்டி அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக அறிவித்து கைப்பந்து வீராங்கனையை சந்தோஷத்சில் திளைக்க வைத்துள்ளார். அதே நேரத்தில் பெண்ணுக்கு சமூகவலைத்தளத்திலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.