Categories: science

ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் ஆச்சர்யம்! வியப்பில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்! அதிசயங்கள் நிறைந்த கோயில்!!

தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி எனும் மாவட்டத்தில், ஹம்பி என்ற இடத்தில் அமைந்துள்ளது விருபாட்சர் என்கிற கோயிலாகும். இந்த கோயில் சிறப்பு கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுமாம். அதிசயம் ஆனால் உண்மை என்ற வாக்கியத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த கோவிலில் இப்படி நடந்துவருகிறது.
தென்னிந்திய அரசர்களின் கட்டடக்கலையின் திறமையினை இந்த கோயில் விளக்குகிறது.

பழங்கால முதலே இந்தியர்கள் கட்டிடக் கலையில் வல்லவர்களாக விளங்கியதை இந்தக் கோவில்களில் நிகழும் அதிசயம் மூலம் நாம் அறியலாம். ஐநாவின் யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்று இந்த திருக்கோவிலை அறிவித்துள்ளது. இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமின்றி பல மர்மங்களுக்கும் சான்றாக விளங்குகிறது.

பெங்களூரிலிருந்து 350கிமீ பயணம் செய்து துங்கபத்திரை ஆற்றங்கரை அடைந்தால் இந்த கோயிலை அடையலாம். ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

விருபாட்சர் கோவிலின் கோபுரத்துடைய நிழல் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தின் மீது தலைகீழாக விழும் அதிசயத்தை காணலாம் ஆனால் அதற்கான காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.