Latest News Updates by The Indian Times

Hot News

விழுப்புரம் மாணவி பிரதீபா

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார்.

10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி அனிதா கடந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது.

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top