Categories: Entertainment

2019ல் ப‌ட்டையை கிளப்பிய‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe)

இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த திரைப்படம் தியாகராஜ குமாரராஜாவால் இயக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா க்ரிஷ்ணன், பஹத் பாசில், மிஷ்கின் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தடம் (Thadam)

தடம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ஒரு திரைப்படம். இந்த படத்தில் அருண் விஜய், தன்யா ஹோப் மற்றும் வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருண் விஜய் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோமாளி (Comali)

2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்ப்பை பெற்றது. 1990 காலகட்டத்து பாடசாலை மாணவனாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. திடீர் விபத்தின் காரணமாக சுமார் 16 வருடங்கள் கோமா நிலைக்கு செல்கிறார் ஜெயம் ரவி, பின்பு அவர் இயல்பு நிலைக்கு திரும்பி என்ன செய்கிறார் என்பதே கதை. யோகி பாபுவின் நகைச்சுவை ரசிக்கும்படியே இருக்கின்றது. காஜல் அகர்வால் அழகாக ஜொலித்து இருக்கிறார்.

மொன்ஸ்டர் (Monster)

2019 மே மாதம் வெளியான இந்த படமானது நெல்சன் வெங்கடேசனால் இயக்கப்பட்டுள்ளது. SJ சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் கருணாகரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீட்டில் இருக்கும் எலிப் பிரச்சினையை மையப்படுத்திய இந்த கதையானது பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஒத்த செருப்பு (Oththa Seruppu)

ஒத்த செருப்பு, இது பார்த்திபன் தயாரித்து, நடித்து, இயக்கி கலக்கிய ஒரு திரைப்படம் என்றால் அது மிகை ஆகாது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது ரசிகர்களிடையே இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

கைதி (Kaithi)

சென்ற வருடம் தீபாவளிக்கு இளைய தளபதி விஜயின் பிகில் படத்திற்க்கு போட்டியாக வெளியாகப்போவதாக இந்த திரைபடக்குழு அறிவித்த போது அனைவருக்கும் சிரிப்பாக இருந்தாலும், வெளியான பின்பு அனைவரின் பாராட்டுகளை அள்ளிக்குவித்த ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்கியது தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படதின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரன் (Asuran)

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்த ஒரு திரைப்படம். இந்த திரைப்படமானது தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் ஒரு கலக்கியது. தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி, ஆடுகளம் நரேன், டீஜெய் அருணாசலம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பேட்ட (Petta)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக அவரின் இயல்பான நடிப்பில் இருந்து வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்தார், இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் 1990களில் இருந்த ரஜினியை மறுபடியும் பார்க்கும் ஒரு வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்தது. திரையரங்கில் ரசிகர்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்தனர்.

விஷ்வாசம் (Vishwasam)

விவேகம் திரைப்படத்தின் படுதோல்விக்கு பின்னர் தல அஜித் மீண்டும் ஒரு முறை சிறுத்தை சிவாவுடன் விசுவாசம் படத்தில் இணைந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கிளைமேக்சில் அப்பா-மகள் சென்டிமென்ட் அனைவருக்கும் அழுகையை வரவைத்தது.

பிகில் (Bigil)

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான பிகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாது வசூலில் சுமார் முன்னூறு கோடியை குவித்தது. இந்த படத்தில் தளபதி விஜய், ஜக்கி ஷ்ரப், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா ரவிச்சந்திரன், வர்ஷா பொல்லம்மா, ரேபா மோனிகா ஜான் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்