Categories: Hot News

3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது…!?

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வெளி வந்த “3” படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக அறிமுகமாகி நடித்தவர்தான் கேப்ரியலா கார்ல்டன்.

இவர் “ஜோடி No1” என்ற ரியாலிட்டி ஷோவில் ரபீக் என்பவரை ஜோடியாக ஏற்று கேப்ரியலா தனது நடனத்தால் அசத்தி நடுவர்களை கவர்ந்த இந்த ஜோடி டைட்டிலையும் வென்றது.

பின்னர், சினிமாவில் நடிக்க முடிவெடுத்து இவர் “அப்பா” என்ற திரைப்படத்தில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது இவர் மாடலிங் மட்டுமின்றி தனது படிப்பிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறாராம். இந்த நிலையில், இவர் பற்றி நீண்ட நாட்களாக எந்த ஒரு செய்தியும் தெரியாமல் இருந்தது.

கொரோனா ஊடரங்கால் அனைத்து பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் எடுத்து அதை பதிவு செய்து பொழுதை கழிக்கும் நிலையில் கேப்ரியலாவும் தனது பார்வையை சமூக வலைத்தளங்களில் செலுத்தியுள்ளார்.

விதவிதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் அடிக்கடி வெளியிட்டு வரும் இவர் நெட்டிசன்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து மீம்களை பறக்க விட வைக்கிறார்.