Latest News Updates by The Indian Times

Entertainment

4 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை

நான்கு மாதங்களுக்கு பின் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்குப் பின் பல இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. கொளத்தூர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவான்மியூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து, சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

4 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை

பள்ளி முடிந்து மாணவர்கள் திரும்பிய வேளையில் மழை பெய்ததால், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்றபட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். பரவலாக பெய்த மழைக்கே சாலைகளில் மழைநீர் தேங்குவதாகவும். கனமழை பெய்வதற்குள் தண்ணீர் வழிந்தோட வழியமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கையும் விடுத்தனர்.

அக்னி வெயில் அனல்பறக்க பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், மண் குளிர மழை பெய்தது மனதிற்கு மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக சென்னைவாசிகள் மகிழ்கின்றனர். இதேபோன்று, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, அந்தமான் நிக்கோபர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top