ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியல் – நம்ம அனுஷ்கா அதுல இருக்காங்களா..?

இந்த ஆண்டிற்கான கவர்ச்சி பெண்கள் பட்டியலில் ஆசியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் இந்தி நடிகை அலியாபட். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், ஹினாகான், சுர்பாப் சந்தானா, ஷிவாங்கி ஜோஷி, நியா ஷர்மா போன்ற நடிகைகள் முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தென் இந்திய நடிகையான அனுஷ்காவுக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியல் - நம்ம அனுஷ்கா அதுல இருக்காங்களா..? 1

வலைத்தளத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. அனுஷ்கா 2006-ல் ரெண்டு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவரது நடிப்பில் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் முக்கிய படங்களாக அமைந்தன.

ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியல் - நம்ம அனுஷ்கா அதுல இருக்காங்களா..? 2

பாகுபலி படத்தின் மூலம் மேலும் புகழ் உச்சிக்கு சென்றார். தற்போது மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாரா இந்த பட்டியலில் இல்லை. இதுபோல் ஆசிய கவர்ச்சி ஆண்கள் பட்டியலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

Leave a Comment