சீன பட்டாசுகளுக்குத் தடை!!

சீன பட்டாசுகளை சட்ட விரோதமாக வாங்கினாலோ, விற்றாலோ அல்லது இறக்குமதி செய்தாலோ அடுத்து தண்டனைக்குரிய குற்றமாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு அதிரடியான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் சட்ட விரோதமாக சீன பட்டாசுக்களை இறக்குமதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றை செய்தால் அது சுங்க சட்டம் 1962 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். தீபாவளி பட்டாசுகளுக்குப் பேர் போனது சிவகாசி. ஆனால் சமீபகாலமாக நலிவுற்ற நிலையில் காணப்படுகிறது. தொழிலிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆதலால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே சீன பட்டாசுகள் விற்பனை செய்து வருவதாக செய்திகள் வருவதால் மத்திய அரசு இவ்வாறு அறிக்கை வெளியிட்டது. சுங்கத்துறை முதன்மை அமைச்சர் கூறுகையில்

“பட்டாசுகள் இறக்குமதிக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் சீன பட்டாசுகளை வாங்கினாலோ, விற்றாலோ, மறைத்து வைத்தாலோ, இறக்குமதி செய்தாலோ அல்லது எந்த வகையிலும் கையாண்டாலும் சுங்க சட்டம் 1962ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.”

சீன பட்டாசுகளில் லித்தியம், காப்பர் ஆக்சைடு மற்றும் சிவப்பு சாயம் போன்ற கெடுதல் அளிக்கும் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவை. அது மலிவு விலையில் கிடைக்கும். ஆதலால் அதனை உபயோகித்தால் கேடு விளைவிப்பதோடு சுற்றுச்சூழலையும் பாதிக்கும். மேலும் சீன பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிபொருட்கள் சட்ட விதிகள், 2008ன் கீழ் கெடுதியானது.

Leave a Comment