Categories: Hot News

2020 வருட ஐ.பி.எல்லுக்கு பிறகு வருங்காலம் பற்றி டோனி முடிவு!!

Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஓய்வு பெறுவது பற்றி பல்வேறு கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற முடியாது நிலை ஏற்பட்டது. ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி , இதன்பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடாமல் ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மற்றும் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக உள்ளூரில் நடந்த போட்டி தொடர்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

Related Post

இந்த சூழ்நிலையில் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கு பின்பே தனது வருங்காலம் பற்றி அவர் முடிவு செய்திடுவார். அவர் ஒரு பெரிய விளையாட்டு வீரர். அதனால் அவரை சுற்றி யூகங்கள் வரும். அதனை நிறுத்த முடியாது.கடந்த ஒரு மாதம் வரை அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் எனவும் சிறந்த உடற்தகுதியுடன் இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஐ.பி.எல். போட்டிக்கு முன் எத்தனை போட்டி தொடர்களில் விளையாடுவார் என்பது பற்றி அவரே முடிவு செய்ய உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருகிற டிசம்பர் 6ந்தேதி உள்ளூரில் தொடங்கவுள்ள 3 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றிலும் அவர் விளையாடவில்லை.

Published by
Senior Editor

Recent Posts

Thalapathy Master Movie Action Scene – Vera level bike Stunt

நடிகர் விஜய் நடிப்பில்  “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்… Read More

June 6, 2020

2019ல் ப‌ட்டையை கிளப்பிய‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த திரைப்படம் தியாகராஜ குமாரராஜாவால்… Read More

June 6, 2020

Friendship Official Motion Teaser – Harbhajan Singh | Arjun | Losliya

Friendship is a Tamil movie acted by Namma Harbhajan Singh,Bigg boss sensational losliya & Vera… Read More

June 5, 2020

Popular Actress in Maldives

சின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை… Read More

March 31, 2020

Nayanthara Vignesh Shivan Video

ஒய்வு நேரங்களில் வெளிநாடு பறக்கும் பிரபலங்கள் இப்போது வெளிநாடா என்று அலறியடித்து ஓடுகிறார்கள்.  அடிக்கடி பாரீஸ் லண்டன் என காதல்… Read More

March 31, 2020

Vijay’s Daughter Photos

இளைய தளபதி விஜய் சங்கீதா திருமணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு தசெய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய்… Read More

March 31, 2020