Dog missing poster – viral on internet

கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளின் ஆசைக்காக நாய் ஒன்று வாங்கிக் கொடுத்தனர். கருப்பான நிறத்தில் இருந்த அந்த நாட்டு நாய்க்குட்டி குழந்தைகளிடமும் மிகவும் அன்யோன்யமாக பழகிவிட்டன. தொடர்ந்து வீட்டில் இருந்த பெரியவர்களும் அதனிடம் மிகுந்த நேசம் காட்டினர்.

Dog missing poster - viral on internet 1
Dog Missing Poster

கடந்த 5ம் தேதி அவர்கள் வீட்டில் இருந்த இந்த நாய்குட்டியை திடீரென காணவில்லை. பக்கத்தில் எங்காவது தான் சென்றிருக்கும் வந்துவிடும் என காத்திருந்தனர். ஆனால் வரவில்லை. பதினைந்து நாள்கள்  கடந்தும் நாய் வீடு வந்து சேரவில்லை. இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான குழந்தைகள் சாப்பிடவும் செய்யாமல், தூங்கவும் செய்யாமல் கடந்த இரு நாள்களாக அதையே நினைத்து புலம்பியுள்ளனர்.

இந்நிலையில் அந்த குடும்பத்தின் சார்பில் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் நாய்குட்டியின் படம் போட்டு குழந்தைகள் சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதால் தவறுதலாக எடுத்தவர்கள் தயவு செய்து திரும்பத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என உருக்கமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Leave a Comment