H Raja about Ajith’s Statement

நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூரில் பாஜகவில் இணைந்தனர். இதனை தவிடுபொடி ஆக்கும் வகையில் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் கூட அரசியல் சாயத்தை பூசுவதற்கு நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அஜித் ரசிகர்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்றும் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெளிவான ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் தான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை என தெரிவித்துள்ளார். தன் பெயரோ, புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை சற்றும் விரும்பவில்லை எனவும் அஜித் பதிலடிகொடுத்துள்ளார்.

இன்னிலையில் பிஜேபியின் தேசிய செயலாளரான எச்.ராஜா சென்னையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குபோது, நாங்கள் அஜித்திற்கு நூலும் விடலை கயிறும் விடலை எங்களுக்கு அது அவசியமும் இல்லை பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Leave a Comment