முகத்தை மூடியபடி ஊர் சுற்றும் அந்த நடிகை..! வைரலாகும் புகைப்படம்

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 300 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீ தேவி இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உண்டு.

முகத்தை மூடியபடி ஊர் சுற்றும் அந்த நடிகை..! வைரலாகும் புகைப்படம் 1

இதில் ஜான்வி கபூர் அவ்வபோது சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் பேசப்பட்டு வருபவர். இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றிய ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரிதும் பேசப்பட்டு வந்தது. இதை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

முகத்தை மூடியபடி ஊர் சுற்றும் அந்த நடிகை..! வைரலாகும் புகைப்படம் 2

இந்நிலையில், தற்போது ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் வாரணாசியில் ஊரை சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது தனது முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு இருந்துள்ளார். அவர் முகத்தை மூடியபடி மார்க்கெட் ஒன்றில் செல்லும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Comment