நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர் – வைரல் வீடியோ

ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நூரின் ஷெரீப். இவர் நடிகை பிரியார் வாரியருடன் இணைந்து ஒரு அடார் லவ் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் நடந்த தனியார் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற நூரின் ஷெரீப்பின் மீது, ரசிகர் ஒருவரின் கைப்பட்டு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சிக்கு நூரின் ஷெரீப் தாமதமாக வந்ததால், கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு ரசிகரின் கை பட்டு நடிகையின் மூக்கு உடைந்து ரத்தம் வந்ததால் வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நடிகை நூரின் கதறி அழுதார்.

Leave a Comment