Nz beats India by 8 wickets

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3–0 என தொடரை கைப்பற்றியது.

Nz beats India by 8 wickets 1

இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டதால். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது.

தவான் 13 ரன்னுக்கு பவுல்ட்டானார் . அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் அவுட்டானார். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்த இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது.

Nz beats India by 8 wickets 2

எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து  14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி போட்டி பிப். 3ல் வெலிங்டனில் நடக்கவுள்ளது.

Leave a Comment