Categories: Hot News

Paravai Muniamma 12 Unknown Facts

பரவை முனியம்மா பற்றி தெரியாத 12 ரகசியங்கள்

  • மதுரையை அடுத்த பரவை என்பதே முனியம்மா பாட்டியின் சொந்த ஊர். எனவே அந்த ஊரின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார்.
  • இவருக்கு 16 வயதில் திருமணம் ஆகி 6 பிள்ளைகள் இருக்கின்றனர். இவரது கணவர் இறந்து விட்டார். பரவை முனியம்மாவுக்கு கடைசியாக மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார்.
  • நாட்டுப்புற பாடல்கள் பாடி வந்த இந்தப் பாட்டி, சினிமாவில் பாட வருவதற்கு முன்னாலேயே மதுரையில் மிகவும் பேமஸ். கச்சேரிகள், ஊர் திருவிழாக்கள் என எப்போதும் இவரது வருகைக்காக பல ஊர்கள் காத்து கிடந்தன.
  • 20 வருடங்கள் பாடல் துறையில் இருந்த பிறகே முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் சினிமாவில் அறிமுகம் ஆன படம் ‘தூள்’ .
  • அதற்கு முன்பதாகவே இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அறிமுகம் ஆகி இருக்க வேண்டும். ஆம் சூப்பர்ஸ்டார் நடித்த ‘கொக்கு சைவ கொக்கு’ பாடலுக்கு இவரைத் தான் முதலில் அணுகி இருக்கிறார்கள்.
  • ஆனால் பாட்டிக்கு விவரம் போய் சேர்வதற்கு முன்பே பாட்டியின் உடன் இருப்பவர்கள் முடியாது என்று மறுத்து விட, அந்த செய்தி பத்திரிகைகளில் “ரஹ்மானுக்கு நோ சொன்ன பாடகி” என்று பரபரப்பாக பேசப்பட்ட போது தான் அவருக்கே தெரிய வந்ததாம்.
  • நாட்டுப்புற பாடல்கள் பாடி வந்த காலத்தில் இருந்தே சரி இவர் பல வெளிநாடுகளுக்கும் போய் பாடி இருக்கிறார்.
  • பரவை முனியம்மா எத்தனை வெளிநாடுகளுக்கு போய் பாடினாலும் முகத்திற்கு ‘பவுடர்’ போட மாட்டாராம்.  வெறும் மஞ்சல் மட்டும் பூசுவதையே வழக்கமாக காலம் முழுவதும் வைத்திருந்தாராம்.
  • அவர் பல வானொலிகளில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.
  • பரவை முனியம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
  • ‘தூள்’ படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை ஜோதிகாவும் இவரும் ரொம்ப கிளோஸாம். கிட்டத்தட்ட நண்பர்கள் போல் பேசி மகிழ்ந்ததாக பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
  • இவரது வாங்கி கணக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் 6 லட்சம் ரூபாய் போட்டிருக்கிறார். அதிலிருந்து வரும் வட்டியை வைத்தே, இத்தனை காலம் மருத்துவம் மற்றும் குடும்ப செலவுகளை பரவை முனியம்மா பார்த்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.