Priya Varrier reply to Director

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகி பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து  சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் ஒரு அடார் லவ் படம் கடந்த மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த சமயத்தில் ஒரு ஆதார் லவ் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பிரியா வாரியர் தான் என்று அந்தப் படத்தின் இயக்குனர் ஓமர் லுலு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.
படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார்.
இந்தநிலையில் இயக்குனரின் இந்த குற்றச்சாற்றுக்கு பதிலளித்துள்ளார் பிரியா வாரியர் நான் உண்மையை கூறினால் அது ஒரு சிலருக்கு மிகப்பெரிய பிரச்சினை உருவாக்கும்.

நான் அவர்களைப் போன்று இருக்க விரும்பவில்லை. என்ன நடந்தாலும் கர்ம வினை அவர்களை சும்மா விடாது என்று கூறியுள்ளார். பிரியா வாரியர் இப்படி பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment