Pujara is expected to get A+ grade

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டில், இந்திய அணியின் புஜாரா இதுவரை 521 ரன் குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும் அடங்கும்.
இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முன்னிலை வகிக்க புஜாரா ஆடியதே காரணம். இதையடுத்து, புஜாராவை கவுரவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ, ஏ பிளஸ், பி, சி என்ற வரிசைபடி பிரிக்கப் பட்டிருக்கிறார்கள். அதன்படி அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

டெஸ்ட் வீரரான புஜாரா ’ஏ’ கிரேட் ஒப்பந்தத்தில் இருக்கிறார். அவரது ஒப்பந்தத்தை ரூ.7 கோடி ஊதியம் வாங்கும் ’ஏ பிளஸ்’ வரிசைக்கு உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *