Shocking Incident in Chennai Hospital

சென்னை அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாததால்  உயிரை பணயம் வைத்து செவிலியர்களிடம் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதது.

இந்த நிலையில் பிரசவத்தின்போது மருத்துவர் இல்லாத நிலையில்  பிரசவம் பார்த்தபொழுது குழந்தை வெளியே வரத்தொடங்கியதும் அனுபவம் இல்லாத நர்ஸ் ஒருவர் குழந்தையின் தலையை பிடித்து இழுத்தபோது தலை துண்டாகி அவர் கையோடு வந்தது.

மேலும் குழந்தையின் உடல் பகுதி மட்டும் தாயின் உள்ளே மாட்டிக்கொண்டது. இதனையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வயிற்றில் இருந்த குழந்தையின் உடல்பகுதியை மீட்டனர்.

அனுபவம் இல்லாத நர்ஸ் பார்த்த பிரசவத்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Leave a Comment