Simran Sister Monal

தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பலரின் மரணம் தற்போது வரை கேள்வி குறியாகவே உள்ளது அதிலும் சில்க் சுமிதாவில் தொடங்கி துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவி வரை அவர்களின் கடைசி நாட்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளது, அதில் பிரபல நடிகையான சிம்ரனின் தங்கை மோனலின் தற்கொலையும் ஒன்று.,

2000- ம் ஆண்டு தனது 19 வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோனல் ஆனால் ஒரு சில படங்களில் நடித்தவர் திடீரென 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார், நடிகர் குணாலுடன் ஏற்பட்ட காதலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

Simran Sister Monal 1

ஆனால் நடிகை சிம்ரன்.,டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாவை மோனல் காதலித்து வந்தார்.

ஆனால் அதை கலாவின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மோனலை தொலைபேசியில் அழைத்து மிரட்டி வந்தனர் என்றும்

மேலும் பிரசன்னாவும் மனமுடைந்து காதலில் இருந்து பின்வாங்கினார். இதனால் மனம் நொந்து மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சிம்ரன் தெரிவித்திருந்தார் இதில், டான்ஸ் மாஸ்டர் கலாவின் வேண்டுகோளின் பேரில்தான், மோனல் வீட்டிலிருந்த சில முக்கிய சாட்சியங்களை மும்தாஜ் கலைத்துள்ளார் என்று சிம்ரன் குற்றசாட்டியதன் பேரில், மும்தாஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

Simran Sister Monal 2

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கை தற்கொலையில் சில ஆதாரங்களை திரட்டி இருப்பதாகவும், அதன்மூலம் மீண்டும் காவல்துறையை அணுக இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன, இதனால் மோனல் தற்கொலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மர்மம் விலகும் என்று கூறப்படுகிறது அதே நேரம் மும்தாஜ் தடயத்தை அளித்த சாட்சியை வைத்தே தற்போது வழக்கினை மீண்டும் விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே மும்தாஜ் மற்றும் காலமாஸ்ட்டர் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment