Categories: Hot News

Thala Ajith’s Bike in Valimai Movie

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை இவ்வருட தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மார்ச் 15ம் தேதி முதல் மீண்டும் அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது, இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு 65% சதவீதம் முடிந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் விடியோக்களும் கசிந்து இணையத்தில் வெளிவந்திருந்தது. இப்படத்தில் அஜித்து பயன்படுத்தும் பைக்கின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இதன் விலை 9.5 இலட்சமாம். அப்படி இருக்க இப்படத்தில் ரேஸ் காட்சி வருவதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு வேர லெவலில் இருந்துவருகிறது.