Categories: Hot News

Varma – New Crew Official Announcement

விஜய் தேவர்கொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரிமேக் செய்து  இந்தப் படத்தை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது. பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லாததால் படத்தை ரி ஷூட் செய்து ஜூன் 2019 இல் ரிலீஸ் செய்வோம் என அறிவித்தனர்.

துருவுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்திருந்தார் பாலாவின் வெர்ஷனில். இந்நிலையில் ஹீரோயினாக பனித்தா சந்து நடிப்பார் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

20 வயதாகும் பனித்தா சந்து லண்டனில் வசித்து வரும் மாடல் நடிகை. பாலிவுட்டில் வருண் தவான் ஜோடியாக அக்டோபர் படத்தில் அறிமுகம் ஆனவர்.