உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பெர்னார்ட் அர்னால்ட். உலக பணக்காரர்கள் பட்டியலில் இதுவரை அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் தான் முதல் இடம் வகித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இப்போது பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்.
பிரெஞ்சு ஆடம்பர குழுமத்தில் எல் வி எம் எச் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் அதிபருமான பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 13.61 லட்சம் கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 13.58 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
இதையடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இதுவரை முதல் இடத்தை பெற்ற அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் தன் முதல் இடத்தை பெர்னார்ட் அர்னால்ட் அவரிடம் பறிக்கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய ஆடம்பர பொருட்கள் உலக சந்தையில் அதிக அளவு மதிப்பையும் தரத்தையும் பெற்றுள்ளது என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in