வருமான வரி துறை சார்பில் புதிய வலைதளம் ஒன்று ஜூன் மாதம் 7 தேதியில் இருந்து
நடைமுறைக்கு வருகிறது. இந்த இணையதளத்தில் வருமான வரி செலுத்துதல், மின்னணு பரிவர்த்தனை, வாடிக்கையாளர்கள் கேள்வி மற்றும் ரீபன்ட் முதலிய சேவைகள் இருக்கும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே இருக்கும் இணையதளத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது எனவும், இந்த வலைத்தளத்தில் ஏராளமான வசதிகள் பெறலாம் என்று அறிவித்திருக்கிறது. வருமான வரித்துறை ஊழியர்களுக்கு இது சுலபமாக இருக்கும், வருமான வரி செலுத்துவோர் இதை எளிய முறையில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
இதையடுத்து, இதுவரை பயன்படுத்தி வரும் வலைதளம் ஜூன் முதல் வாரம் வரை பயன்படுத்தலாம் என்றும், ஜூன் 1 முதல் 7 வரை அந்த வலைதளம் செயல்பாட்டில் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகள் இந்த தேதிக்கு முன்னதாக அல்லது ஜூன் மாதம் 10 ஆம் தேதிக்கு பிறகோ ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜூன் மாதம் 10 ஆம் தேதி முதல் அனைத்து குறைகளையும், கோரிக்கைகளையும் கவனிப்பர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in