தமிழ் சினிமாவில் டாப் மோஸ்ட் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் 65 படம் குறி்த்து ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. லாக் டவுன் அப்போது கூட இவர் படம் திரையரங்குகளில் அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தளபதி 65 படம் குறி்த்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. முதலில் இந்த படம் யார் இயக்க உள்ளார் என்பதில் குழப்பம் இருந்தது. இந்த படத்தை எடுப்பதற்கு வெற்றிமாறன், அட்லீ, பாண்டிராஜ், நெல்சன் என பல இயக்குநர்கள் பெயர் அடிபட்டது. இறுதியாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராக உள்ளது என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இதனையடுத்து இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. அது குறித்து தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே தான் அவர். இவருக்கு மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் சம்பள குறைவு காரணமாக அதை நிராகரித்து விட்டார். இப்போது தளபதி 65 படத்தில் நடிக்க 3.5 கோடியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
https://twitter.com/i/status/1362478851318640641
இது குறி்த்து அவர் அளித்துள்ள பேட்டியில் தமிழில் நடிக்க மிகவும் ஆர்வம் எனக்கு. மேலும் தளபதி கூட நடிப்பது நீண்ட நாள் கனவு என்று குறிப்பிட்டுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in