இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது அசத்தியுள்ளார். அவரை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய தென்னாபிரிக்க இடையான ஐந்து போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ததால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய சமன் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் அடித்தார். ரன் துரத்தலின் போது ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை ஸ்மிருதி மந்தானா படைத்தார்.ஆடவர், மகளிர் என இரு பிரிவு கிரிக்கெட்டிலும் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்களை விளாசியவர் என்ற பெருமையையும் மந்தனா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/i/status/1369211252929523713
Credits: BCCI Women
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in