யாருக்கு தான் புகழ் மேல க்ரஷ் இருக்காது! குக்கு வித் கோமாளி புகழை புகழ்ந்து பேசிய பவித்ரா.

விஜய் டிவி யில் தற்போது பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. சமயல் செய்யும் குக்குகளை சேட்டைகள் செய்து கதறவிடும் கோமாளிகள் தான் இந்த நிகழியை இத்தனை பேர் ரசித்து பார்க்க செய்துள்ளனர். ஒரு சமையல் நிகழ்ச்சி இந்தளவிற்கு பிரபலமானது இதுவே முதல் முறை. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வலியுறு குலுங்க சிரிக்க வைக்கும். ஆனால் சென்ற வாரம் நடந்த எலிமினேஷன் சுற்று குக்கு வித் கோமாளி ரசிகர்களை கண் கலங்க செய்தது என்றே கூறலாம்.

யாருக்கு தான் புகழ் மேல க்ரஷ் இருக்காது! குக்கு வித் கோமாளி புகழை புகழ்ந்து பேசிய பவித்ரா. 1

விளம்பரம்

சென்ற வாரம் எலிமினேஷன் ரௌண்டில் சிக்கியது அஸ்வின் மற்றும் பவித்ரா தான். சாதாரண போட்டியிலேயே சமையலில் கலக்கும் அஸ்வின் எலிமினேஷன் ரௌண்டில் விட்டு விடுவாரா. இருந்தாலும் அஸ்வினுக்கு ஈடாக சமைத்த பவித்ரா போட்டியை விட்டு வெளியேற்ற பட்டர். அதன் பிறகு அவர் வெளியேறியதற்கும் காரணம் பாலா தான் என்று அனைவரும் மீம்ஸ் போட தொடங்கி விட்டனர். பவித்ரா வெளியேறியபோது இந்த நிகழ்ச்சியில் இந்தளவிற்கு புகழ்பெற்றதற்கு காரணம் புகழ் தான் என்று கூறி இருப்பார்.

யாருக்கு தான் புகழ் மேல க்ரஷ் இருக்காது! குக்கு வித் கோமாளி புகழை புகழ்ந்து பேசிய பவித்ரா. 2

விளம்பரம்

வெளியேற்றத்திற்கு பிறகு பவித்ரா லைவ் வீடியோ ஒன்றில் ரசிகர்கள் கேள்வி கேட்க பதிலளித்து வந்தார். அதில் புகழை பற்றி ஒருவர் கேட்டிருந்தார். எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தால் யாருக்கு தான் அவர் மேல் க்ரஷ் இருக்காது என்று புகழை புகழ்ந்து கூறியுள்ளார். அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக பெரிய அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார் புகழ். இதனை எடுத்துரைக்கும் விதமாக தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment