பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் காலமானார்!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து கொண்டிருந்த பிரபல நடிகர் வெங்கடேஷ் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இவர் பாரதி கண்ணம்மா மட்டுமல்லாது சரவணன் மீனாட்சி , ஈரமான ரோஜாவே போன்ற விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களில் நடித்த நடிகர். விஜய் டிவியில் சிரித்த முகத்துடன் இருக்கும் நடிகர் திடீரென இறந்து போன செய்து சின்னத்திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் தனனுடைய நண்பர்கள் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் , நல்ல செய்தி என்றாலும் ஒடனே வாழ்த்து கூறி விடுவார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் காலமானார்! 1

விளம்பரம்

சித்ராவின் இறப்பின் போதும் தற்கொலை செய்வது தவறு என்று கூறி இருந்தார். அப்படி பட்ட நடிகர் இன்று காலமானார். இவர் சின்னத்திரையையும் தண்டி பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பீசா , சூது கவ்வும் , தெகிடி என பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். செல்லமடி நீ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் கடைசியாக பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் இறந்து போன செய்தி அதிர்ச்சியளிப்பதோடு சின்னத் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

🔴SHOCKING! Bharathi Kannamma சீரியல் நடிகர் திடீர் மரணம் | Venkatesh, Saravanan Meenatchi, Vijay TV

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment