பாகுபலி போன்ற வெற்றி படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ராணா மற்றும் ராட்சசன் ,ஜீவா , முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்த விஷ்ணு விஷால் ஆகியோர் தற்போது இனைந்து நடித்துள்ள படம் காடன். யானைகள் மற்றும் காடுகளை வைத்து மையமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே யானை யை மையமாக கொண்டு கும்கி என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் யானைகளை மையமாக வைத்து காடன் படத்தி எடுத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், அஸ்வின் ராஜா, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடங்களும் வெளியாகி வைரலானது. இந்த படம் மார்ச் 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஷ்ணு விஷால் யானையிடம் ஓடி சென்று யானை மேல் ஏறிக்கொண்டு கத்துகின்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் யானைகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றது என்பது நாம் படத்தின் டீசர் பார்த்த போதே தெரிந்திருக்கும். தற்போது படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட இந்த யானை வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/TheVishnuVishal/status/1374638335822422026
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in