BIGG BOSS Tamil பிரபலங்கள் கலக்கும் BB ஜோடிகள் நிகழ்ச்சியின் Promo Video

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று இருக்கிரது.”Watch BB Jodigal Promo Video Down Below”

BIGG BOSS Tamil பிரபலங்கள் கலக்கும் BB ஜோடிகள் நிகழ்ச்சியின் Promo Video 1
Picture – Snapshot from Vijay Television Official Youtube Channel

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. பாலா மற்றும் ஆரியின் சண்டைக்காகவே இந்த சீசனுக்கு பல ரசிகர்கள் இருந்தனர். கடந்த சீசன் டைட்டில் வின்னர் பட்டத்தை ஆரி அர்ஜுனன் தட்டி சென்றார். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு ஜோடிகள் இருந்திருக்கிறார்கள். காதல் ஜோடிகளும் சரி சண்டை போடும் ஜோடிகளும் சரி சீசனுக்கு ஒருவர் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடிகளை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை கொண்டு வருகிறது விஜய் டிவி.

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் , சோம் மற்றும் ஷிவானி , ஆஜித் மற்றும் கேபி , ஷாரிக் மற்றும் வனிதா , சம்யுக்தா, பாலாஜி மற்றும் நிஷா , மோகன் வைத்தியநாதன் மற்றும் வனிதா ஆகிய ஜோடிகள் கலந்து கொள்கின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வில் சாண்டி மாஸ்டர் அனைவரையும் introduce செய்வதுபோல் இருக்கிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜ் யார் என்பதை suspense ஆக வைத்துள்ளனர். இப்போதே பிக் பாஸ் சீசன் 5 ல் யார் யார் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று அடுத்த சீசனுக்காக பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. நிச்சயம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

BB Jodigal | 2nd May 2021 - Promo 1

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment