தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். இது போக கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி தக்ஷா ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் உலக சாதனை படைத்தார்.
விசுவாசம் படப்பிடிப்பு முடிந்தவுடன் வெளிநாடு சென்று aero modelling கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ஆலோசகராக பணியாற்றியது மிகவும் பாராட்டிற்குரிய நிகழ்வாக திகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்தார்.
பிறகு ரைபிள் துப்பாக்கி சூடு பயிற்சி அகாடமியில் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் தமிழகத்தின் 46 வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு 3 தங்க பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார் அஜித். இளைஞர்களுக்கே ரோல் மாடலாய் திகழும் இவர் தன் ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளார் என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவிற்கே தன் திறமையை வெளிச்சம் போட்டு கட்டிய தல அஜித்திற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அதில் நேற்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக்கிறார். அவர் பதிவிட்டிருப்பதாவது, தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்!!
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in