அஜித் ரசிகர்கள் கூட எடுத்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டிரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் அஜித் அடுத்த படமாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை போனிகபுர் பிரமாண்டமான முறையில் இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது இருந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை மாநகரில் நடைபெற்று இருந்தது. கொரோன லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் சில மாதங்கள் முன்பு மீண்டும் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டில் எடுக்க வேண்டிய ஒரு காட்சியை டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்க படக்குழுவினர் அனைவரும் முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து நடிகர் அஜித் சமீபத்தில் வாரணாசி சென்றுள்ளார். அங்கு காசிக்கு சென்று கடவுளை வழிபாடு செய்து விட்டு அங்கு புகழ் பெற்ற நகரமாக உள்ள சாரநாத் சென்றுள்ளார். அங்கு பனாரசி என்ற மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் சாப்பிட்டு இருக்கிறார்.
அவர் மாஸ்க் அணிந்து இருந்ததால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் மாஸ்க் எடுக்கும் போது அங்குள்ள ரசிகர்கள் அவரை சுற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் அந்த கடை உரிமையாளர் பேட்டி அளிக்கும் போது அவர், நடிகர் அஜித் சிக்கிம் வரை பைக்கில் சென்று இருக்கிறார்.
கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோ மீட்டர் சென்று இருக்கிறார். என்று கூறியுள்ளார். அஜித் மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் என்பவர் அவருடன் சென்றுள்ளார். அவர் ரசிகர்கள் கூட புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in