அமெரிக்காவின் பிரபலமான மற்றும் அழகான நடிகை என்றால் அது ஏஞ்சலினா ஜோலி தான். இவர் நடிகை மட்டுமல்ல இயக்குனரும் கூட. 1982 ஆம் ஆண்டு வெளியான லுக்கிங் டூ கெட் அவுட் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஏஞ்சலினா ஜோலி. இதுவரை இவர் 40 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் உலக புகழ்பெற்ற ஏஞ்சலினா ஜோலியின் சமீபத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. மே 20 ஆம் தேதி உலக தேனீக்கள் தினம் கொண்டாடபட்டு வருகிறது.
உலகில் உள்ள தேனீக்கள் அழிந்து விட கூடாது என்ற விழிப்புணர்வு காரணமாக இந்த உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு ஏஞ்சலினா ஜோலி magazine போட்டோஷூட் செய்துள்ளார்.அவர் மீது 100 க்கும் மேற்பட்ட தேனீக்கள் அவர்மீது உலாவி கொண்டு இருக்க , இந்த அழகான போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 18 நிமிடத்திற்கும் மேல் ஏஞ்சலினா ஜோலி அசையாமல் ஒரே போஸில் இருக்க , தேனீக்கள் அவர்மீது சுற்றிக்கொண்டிருக்க போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளது.
தேனீக்கள் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஏஞ்சலினா ஜோலி 18 நிமிடங்கள் போட்டோஷூட் செய்து முடிக்கும் வரை அசையாமல் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததே. அதே போல் அவர் இருக்க இந்த புகைப்படம் முகம் அழகாக வெளி வந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.watch the video below
https://youtu.be/MMM2Y5eui5o
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in