தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த பாம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
நிறைய முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இந்த படம் வெற்றி அடையாமல் நஷ்டத்தை தேடி தந்தது.மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த படம் வெற்றியடையாமல் போனது ரசிகர்களை வேதனை அடைய செய்தது. தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் பேசியதை விட அதிகமாக உள்ளதால் இந்த படம் மிக பெரிய வசூலை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
https://twitter.com/RajiniFC/status/1380028905575354369
இதனால் சிறுத்தை சிவா இந்த படத்திற்கு இன்னும் வலு சேர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in