Anti Indian – Sneak Peek | Blue Shirt Maran | Adukalam Naren | Radha Ravi | Blue Sattai

சினிமா படங்களை விமர்சித்ததால் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் ப்ளூ சட்டை மாறன்! இவர் பட விமர்சனம் செய்யும் பொழுது அதிகமாக ப்ளூ சட்டை அணிந்திருந்த காரணத்தினாலேயே இவரை மக்கள் மற்றும் இவரது ரசிகர்கள் இவரை ப்ளூ சட்டை என்று செல்லமாக அழைப்பது வழக்கமே! இந்த செய்தி இவரை அறிந்த பலருக்கும் தெரிந்த ஒன்றே! திரைப்படங்களை முழுவதுமாக முதல் ஆளாக பார்த்துவிட்டு அந்த படத்தை பற்றிய புரிதல்கள் பெரிதும் இருந்ததா இவருக்கு என்று கேட்கும் அளவிற்கு இவரது விமர்சனம் அமைந்திருக்கும்! அப்படி ஒரு வித்தியாசமான மற்றும் பலர் இவரை வசை பாடும் அளவிற்கே இவரது விமர்சனத்தின் தரம் அமைந்திருக்கும்!

Anti Indian - Sneak Peek | Blue Shirt Maran | Adukalam Naren | Radha Ravi | Blue Sattai 1

விளம்பரம்

அவ்வாறு இருக்கையில் பல சினிமா ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிககைகளின் ரசிகர்கள் படம் வரும் பொழுது எல்லாம் இவரை தவறாமல் திட்டி தீர்த்து விடுவார்கள் என்றே தான் சொல்லணும்! சமீபத்தில் கூட ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே படத்தை குறித்த விமர்சனத்தால் ரஜினி ரசிகர்கள் தினமும் இவரை ட்விட்டரில் வார்த்தைகளால் வதம் செய்து வருகின்றனர்! படத்தை பற்றி இவ்வளவு குறை கூறும் இவர் ஒரு நல்ல படத்தை எடுத்துக்காட்ட முடியுமா என பலரும் கேள்வி எழுப்பிய வண்ணம் அவர்கள் வாயை அடைக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் கதை, வசனம் எழுதி இயக்கிய படமான “ஆன்டி இந்தியன்” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலாக பகிரப்பட்டு மக்கள் மத்தியில் பரபரப்பாக சில நாட்கள் பேசப்பட்டது!

Anti Indian - Sneak Peek | Blue Shirt Maran | Adukalam Naren | Radha Ravi | Blue Sattai 2

விளம்பரம்

ஆனால், பலரும் இவரது படத்தை பார்க்கவே ஆவலாக இருந்தார்கள்! ஏனெனில் மற்றவர்களின் உழைப்பை குறை கூறு இவரது படைப்பின் தரத்தை ஆய்வு செய்யவே என்பது தான் நிதர்சனமான உண்மை! அவ்வாறு சினி ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த செய்தி தான் தற்பொழுது வந்திருக்கிறது! இன்னும் சில நாட்களில் இவரது திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது! இதனையடுத்து ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் திரைப்படத்திலிருந்து ஒரு பிரத்யேக காட்சி வெளியாகி இருக்கிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment