விஜய் டிவியில் அதிரடியாக களமிறங்கும் அர்ச்சனா – Promo வீடியோ

அர்ச்சனா இவர் ஒரு தொகுப்பாளர் என்று ஒரு அறிமுகம் தேவையில்லை. முதல் முதலில் சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி தன்னுடைய பணியை காமெடி டைம் என்ற நிகழ்சியில் தொடங்கினார். அதற்கு பிறகு இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு 2004 ல் அவர் வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் பெரிதாக மீடியாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் தொகுப்பாளராக மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆனார். இதில் அவர் மற்றும் அவருடைய மகள் இருவரும் சேர்ந்து வழங்கிய சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். அது ரசிகர்களை கவர்ந்து இருந்தது. அதை தொடர்ந்து அவர் சரிகம என்ற பாடல் ரியாலிட்டி ஷோ மூலம் தன்னை நிலைநாட்டி கொண்டு ஒரு சிறந்த தொகுப்பாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் அதிரடியாக களமிறங்கும் அர்ச்சனா - Promo வீடியோ 1

விளம்பரம்

இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்சியில் கலந்துக் கொண்டு ஒரு சிறந்த போட்டியாளராக இருந்தார். இப்போது விஜய் டிவியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக இருக்கும் ‘காதலே காதலே’ என்ற நிகழ்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இதில் பூவே பூச்சுடவா என்ற நாடகத்தில் அறிமுகம் ஆன ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் தங்கள் காதலை வெளிபடையாக சொன்ன நிலையில் முதல் விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். இதன் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kadhale Kadhale | 14th February 2021 - Promo 1

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment