தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. ஆரம்பகாலத்தில் சிறப்பான கதைக்களத்தை தேர்வு செய்து தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி கொண்டிருந்த இவர், சமீபகாலமாக ஒரு வெற்றி படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இறுதியாக இவர் நடித்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
சமீபத்தில் தான் இவருடன் கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய இரண்டு படங்களில் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா தற்போது சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் டெடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
படத்தின் போஸ்டர் பார்த்தபோது இது குழந்தைகளுக்கான படம் என்றே அனைவரது மனத்திலும் தோன்றியது. ஆனால் படத்தின் ட்ரைலர் படத்தின் தரத்தையே உயர்த்தி காட்டி இருந்தது. ஆர்யாவின் முரட்டு தன்மையுடன் குழந்தைத் தனமான டெட்டி பியரை பார்க்கும்பொழுது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அதுமட்டுமில்லாது இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு வைரலாகி இருந்தது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in