இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான முறையில் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது. இதனால் தர வரிசை பட்டியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்ட்ரேலியா இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்த அணி இங்கு சிகப்பாக விளையாட வில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது இரண்டாவது தொடர் தொடங்கி விட்டது. இங்கிலாந்து அணி 482 ரன்களை இலக்காக வைத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் புஜாரா, பண்ட் ஆகியோர் தொடக்கத்தில் இறங்கி விளையாடி ஆட்டம் இழந்த பிறகு கோலி மற்றும் அஷ்வின் ஆகியோர் கை கோர்த்து அணியை உச்சத்துக்கு கொண்டு சென்றனர்.
அஷ்வின் சதம் அடித்த சாதனை படித்தார். இவ் ஒரே நாளில் 5 விக்கெட் மற்றும் 100 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்து அணி பிட்ச் சரி இல்லை என்று சொன்ன கருத்தை தவிடுபொடியாக்கும் முறையில் விளையாட்டை வெளிபடுத்தி இருக்கிறார். இதனால் இவருக்கு சென்னையின் சூப்பர் கிங் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இவர் ஆஸ்ட்ரேலியா மற்றும் இங்கிலாந்து என்று ஒரு குட்டி ஸ்டோரி என்ற விஜய் பாடலை மய்யமாக வைத்து அவர் யூடியூப் சேனலில் கதை தொடரில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கூறி இருக்கிறார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in