Ayngaran – Official Trailer | G.V. Prakash Kumar | Raviarasu | Mahima Nambiar

ஜி.வி.பிரகாஷ்குமார் தமிழ் இசைத்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த இசையமைப்பாளர்.
இவரது பாடல்களில் காதல் ரசனை மிகுந்து காணப்படும். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் தங்கை பையன் என்பதால், இசை இவரது ரத்ததிலேயே கலந்து இருக்கும். இவரது மனைவி பிரபல பிண்ணனி பாடகி சைந்தவி. இன்னிசை குரலால் மெல்லிசை பாடல்கள் மூலம் பலரின் உள்ளங்களை கவர்ந்தவர். இசையமைப்பது மட்டுமல்லாமல் பாடுவது, நடிப்பது என்று பன்முகத் திறமையாளர்தான் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் “பேச்சுலர்”. 18+ அர்த்தம் கொண்ட படங்கள், இரட்டை வசனங்கள் கொண்ட படங்களில் மட்டுமே ஜி.வி பிரகாஷ் நடிக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது எப்போதும் வைப்பதுண்டு.

Ayngaran - Official Trailer | G.V. Prakash Kumar | Raviarasu | Mahima Nambiar 1

விளம்பரம்

அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி படத்தை இயக்கி ரவி அரசு ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கிய படம்தான் ஐங்கரன். இவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு இந்த படம் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த இந்த படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சோனி லைவ் தளத்தின் தமிழ் பகுதியின் சினமா ஒருங்கிணைப்பாளர் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆவார். இவரால் படம் எடுக்கப்பட்டு வெகுநாட்களாக வெளியிடப்படாமல் தூங்கிக் கொண்டிருந்த ஐங்கரன் படம் தற்போது வெளியாக உள்ளது. Youtube Video Code Embed Credits: Divo Music

Ayngaran - Official Trailer | G.V. Prakash Kumar | Raviarasu | Mahima Nambiar 2

விளம்பரம்

இதேபோல் கார்த்திக் நரேன் இயக்கிய பல வருடங்களாக வெளியாகாமல் உள்ள திரைப்படம்தான் நரகாசூரன் இந்த படமும் சோனி லைவ் ஓடிடி மூலம் ஆகஸ்ட் 13 அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியகியுள்ளது. வருகின்ற மார்ச் 30ம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “திட்டம் இரண்டு” என்ற படமும் சோனி லைவ்வில் நேரடியாக வெளியாகிறது. தற்போது ஐங்கரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 13 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ட்ரைலரை காண.. Watch Ayngaran Trailer below..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment